வியாபாரியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் சிக்கினர்


வியாபாரியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 10 March 2023 12:30 AM IST (Updated: 10 March 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

சூளகிரி அருகே உள்ள சென்னப்பள்ளியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 26). காய்கறி வியாபாரி. இவர் நேற்று முன்தினம் காலை சூளகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் சர்வீஸ் சாலையில் நின்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் கேட்டனர். இதுகுறித்து பிரவீன் அளித்த புகாரின்பேரில் கத்தியை காட்டி மிரட்டிய லாரி டிரைவர்களான மதுரை மாவட்டம் சக்கியமங்கலம் செந்தூரப்பாண்டி (29), திருவண்ணாமலை மாவட்டம் வெள்ளியம்பாக்கம் ராமகிருஷ்ணன் (43) ஆகிய 2 பேரையும் சூளகிரி போலீசார் கைது செய்தனர்.


Next Story