தாராபுரத்தில் உழவர் சந்தை விவசாயிகளுக்கும், தரைக்கடை வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் நேற்று காலையில் விவசாயிகள் உழவர் சந்தை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரத்தில் உழவர் சந்தை விவசாயிகளுக்கும், தரைக்கடை வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் நேற்று காலையில் விவசாயிகள் உழவர் சந்தை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம்
தாராபுரத்தில் உழவர் சந்தை விவசாயிகளுக்கும், தரைக்கடை வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் நேற்று காலையில் விவசாயிகள் உழவர் சந்தை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம் எம். எஸ். பி நகரில் அமைந்துள்ள உழவர் சந்தை.இதில் தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் காலை 4 மணி முதல் காய்களை கொண்டு வந்து விவசாயிகளுக்கு அவர் உரிய இடத்தில் அமர்ந்து வியாபாரம் செய்து வந்தனர்.இவர்களுக்கு போட்டியாக தரைக் கடை வியாபாரிகளும் சாலையோர கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். தாங்கள் கொண்டுவரும் காய்கறிகளில் பாதி காய்கறிகளை கொண்டு சென்று மாடுகளுக்கு போடுவதாக குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையர் ராமர், தாசில்தார் ஜெகஜோதி மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் விவசாயிகள் கேட்கவில்லை.இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நேற்று தாராபுரம் ஆர்.டி.ஓ குமரேசன் தலைமையில் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் தரக்கடை வியாபாரிகள் ஆகியோருடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது
சாலையோர வியாபாரிகள் நாங்கள் உழவர் சந்தை அருகே வியாபாரம் செய்வது எங்களது தாராபுரம் தினசரி மார்க்கெட்டில் அமைக்கப்பட்டிருந்த கலைகளை அகற்றிவிட்டு தற்பொழுது வணிக வளாகம் கட்டி வருவதாலும் தாங்கள் அரசின் விதிப்படி சாலை ஓரங்களில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம் என கூறினர். விவசாயிகள் காலை நாலு மணிக்கு கொண்டு வந்த காய்கறிகளை காலை 8 மணி வரை வியாபாரம் செய்யாமல் விவசாயி என்ற போர்வையில் சிலர் வெளியூர் மார்க்கெட்டில் காய் வாங்கிக் கொண்டு வாங்கி வந்து உழவர் செய்ததில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர் அவர்களை கண்டறிந்து நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாங்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வியாபாரம் செய்து வருகிறோம் என கூறினர்.இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த ஆர்.டி.ஓ.குமரேசன் கூறியதாவது, உழவர் சந்தையில் இருந்து 100 மீட்டர் அருகில் வியாபாரம் செய்ய அனுமதி இல்லை அதன் அடிப்படையில் நீங்கள் 100 மீட்டர் தள்ளி கடைகளை அமைத்து வியாபாரம் செய்ய வேண்டும்., இல்லையேல் உழவர் சந்தை முடிந்த பின்னால் 8மணிக்கு மேல் தரைக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்யலாம் என கூறி பிரச்சினை களை முடித்து வைத்தால் இருதரப்பினரும் கலைந்து சென்றனர். இது குறித்து தாராபுரம் நகர்மன்ற ஆணையர் ராமர் மற்றும் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தாசில்தார் ஜெகஜோதி ஆகியோர் நடத்தி பேச்சு வார்த்தையின் போது உடன் இருந்தனர்.இதனால் தாராபுரம் பொள்ளாச்சி சாலை உழவர் சந்தை அமைந்துள்ள பகுதிகளில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.