வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகக்குழு கூட்டம்


வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகக்குழு கூட்டம்
x

நெல்லை டவுனில் வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் வியாபாரிகள் நலச்சங்க நிர்வாக குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. தலைவர் ஸ்டீபன் பிரேம் குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் பெத்துகனி, கணேஷ், பொருளாளர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் வெங்கட்ராமன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில், பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது. நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்திற்கு வரும் பக்தர்களுக்கு காவல்துறை தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை செய்து தர வேண்டும், என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணைச்செயலாளர்கள் முருகன், பகவதிராஜன், நிர்வாக குழு உறுப்பினர்கள் தர்மராஜ், செல்லச்சாமி, முகம்மது சித்திக், சேது ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story