வியாபாரிகள் முன்னேற்ற சங்க நிர்வாக கமிட்டி கூட்டம்
உடன்குடியில் வியாபாரிகள் முன்னேற்ற சங்க நிர்வாக கமிட்டி கூட்டம் நடந்தது.
உடன்குடி:
உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்க நிர்வாக கமிட்டி கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடந்தது. சங்க செயலாளர் வேல்ராஜன், துணைச் செயலாளர் ராஜா, பிரதீப் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பொருளாளர் சுந்தர்சிங் வரவேற்று பேசினார். கூட்டத்தில், உடன்குடி மெயின் பஜார் 4 ரோடு சந்திப்பில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள போலீஸ் பூத்தை உடனடியாக அப்புறப்படுத்தி, வேறு இடத்தில் அமைக்க வேண்டும். உடன்குடி பஜார் வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள், பன்றிகள் மற்றும் கால்நடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். உடன்குடிபஜார் பகுதியில் பழுதான ரோட்டை புதுப்பிக்க வேண்டும். இக் கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அமுதன் ஆண்ட்ரூஸ் நன்றி கூறினார்.