'கருணை கொலை செய்து விடுங்கள்'


கருணை கொலை செய்து விடுங்கள்
x
தினத்தந்தி 14 Feb 2023 12:30 AM IST (Updated: 14 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

‘கருணை கொலை செய்து விடுங்கள்’ என்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனு கொடுத்தார்.

திண்டுக்கல்


வேடசந்தூர் தாலுகா மணியக்காரன்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி குமரவேல் (வயது 45). இவர் நேற்று என்னை கருணை கொலை செய்திடுங்கள் என்று எழுதப்பட்ட பதாகையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் வாழ வழியற்ற நிலையில் இருப்பதால் தன்னை கருணை கொலை செய்யும்படி மனு கொடுத்தார். அந்த மனுவில், மணியக்காரன்பட்டியில் நான் குடிசை வீடு கட்டி வசித்து வந்தேன். அந்த இடம் ஆக்கிரமிப்பு நிலம் என்று கூறி அதிகாரிகள் எனது வீட்டை இடித்து விட்டனர். இதனால் கோவில்கள், உறவினர்களின் வீட்டு திண்ணையில் வாழ்நாளை கழித்து வருகிறேன். நான் வசித்த இடத்துக்கு பட்டா கேட்டு 2 ஆண்டுகளாக மனு கொடுத்தும் இதுவரை பட்டா கிடைக்கவில்லை. அந்த இடத்தை எனக்கு தரவிடாமல் ஒருவர் தடுப்பதோடு, மிரட்டி வருகிறார். எனவே வாழ வழி இல்லாத என்னை கருணை கொலை செய்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று கூறப்பட்டிருந்தது.



Next Story