கருணை கொலை செய்யக்கோரி பேனர் வைத்த விவசாயிகள்


தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டை அருகே கருணை கொலை செய்யக்கோரி விவசாயிகள் பேனர் வைத்தனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய 3 ஊராட்சிகளில் 3,500 ஏக்கர் விவசாய நிலங்களை சிப்காட்டிற்கு கையகப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உத்தனப்பள்ளியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் போராட்டம் நேற்று 26-வது நாளாக தொடர்ந்து நடந்தது. இதற்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உத்தனப்பள்ளி அருகே உள்ள கூகனூர் மற்றும் லாலிக்கல் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சிப்காட்டுக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தங்களது நிலங்களில் தங்களை கருணை கொலை செய்யக்கோரி பேனர் வைத்துள்ளனர். அதில் 5-வது சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை அபகரித்து வருகின்றனர். இதனால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எனவே எங்களது நிலத்திற்கு பதில் நஷ்டஈடாக பணமோ, வேறொரு நிலமோ வேண்டாம். எங்களை கருணை கொலை செய்து விடுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story