திறன்மிகு மாணவர் விருது வழங்கும் விழா


திறன்மிகு மாணவர் விருது வழங்கும் விழா
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-14T00:16:45+05:30)

செங்கோட்டை அரசு பள்ளியில் திறன்மிகு மாணவர் விருது வழங்கும் விழா நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட மேலச்செங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பள்ளியில் கல்வி மட்டுமன்றி ஒழுங்கான வருகை, புதிய மாணவர் சேர்க்கையில் பங்களிப்பு, மன்ற செயல்பாடுகள் உள்ளிட்ட பிறவகை திறன்கள் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு 2022-2023-ம் கல்வியாண்டுக்கான திறன்மிகு மாணவர் விருது வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமையா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் வி.எஸ்.ராஜன் முன்னிலை வகித்தார். ஆசிரியா் கருப்பசாமி நாதன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

10-ம் வகுப்பு 'அ' பிரிவு மாணவர் கார்த்திக் என்பவருக்கு நகரசபை 12-வது வார்டு கவுன்சிலர் இசக்கிதுரை பாண்டியன் பரிசு மற்றும் விருது வழங்கினார். தொடா்ந்து மாணவரை ஆசிரியர்கள் மாலீஸ்வரி, கலைவாணி, ஜெசி சாரதா சலோமி ஆகியோர் பாராட்டினர். முடிவில் ஆசிரியா் ஜோசப்ராஜசிங் நன்றி கூறினார்.Next Story