16 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய மேஸ்திரி போக்சோ சட்டத்தில் கைது


16 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய மேஸ்திரி போக்சோ சட்டத்தில் கைது
x

16 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய மேஸ்திரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

போளூர்

கலசபாக்கம் தொப்பானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன் (வயது 29), கட்டிட மேஸ்திரி. இவர் அதே ஊரை சேர்ந்த 16 வயது பெண்ணை காதலித்து வந்தார்.

மேலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கிடாம்பாளையம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவலுக்கு வெளியே யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இவர்களை இருவீட்டாரும் சேர்க்கவில்லை. இதனால் அன்பரசன் இளம்பெண்ணுடன் உறவினர் வீட்டில் தங்கினார்.

இந்த நிலையில் இளம்பெண் உடல்நிலை சரியில்ைல என்று தனது தாயாருக்கு தெரிவித்தார். அவர் வந்து ஆதமங்கலம் புதூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார்.

அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் இளம்பெண் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.

பின்னர் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர்.

இதையடுத்து இளம்பெண்ணை கர்ப்பமாகிய அன்பரசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


Next Story