கூடுதலாக கிடைத்த ரூ.2 ஆயிரத்தை நேர்மையுடன் ஒப்படைத்த மேஸ்திரி


கூடுதலாக கிடைத்த ரூ.2 ஆயிரத்தை நேர்மையுடன் ஒப்படைத்த மேஸ்திரி
x

ஏ.டி.எம். மையத்தில் கூடுதலாக கிடைத்த ரூ.2 ஆயிரத்தை மேஸ்திரி, வங்கியில் ஒப்படைத்தார்.

வேலூர்

பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 42). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கசென்றார். அங்கு ரூ.2 ஆயிரம் எடுப்பதற்காக தொகையை பதிவு செய்தார். அப்போது ரூ.2 ஆயிரத்துக்கு பதில் கூடுதலாக ரூ.2 ஆயிரம் என ரூ.4 ஆயிரம் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சந்தேகத்துடன் தனது வங்கி சேமிப்பு கணக்கை சரிபார்த்த போது அவரது சேமிப்பு கணக்கில் அவ்வளவு பணம் இல்லை என தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து மறுநாள் பேரணாம்பட்டில் உள்ள வங்கிக்கு சென்று மேலாளரிடம் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்த போது கூடுதலாக பணம் வந்தது குறித்து தெரிவித்து, கூடுதலாக வந்த ரூ.2 ஆயிரத்தை ஒப்படைத்தார்.

பணத்தை பெற்றுக்கொண்ட மோலாளர் முத்துசாமி, வங்கியில் இருந்த வாடிக்கையாளர்கள் முன்பு கட்டிட மேஸ்திரி முரளியின் நேர்மையை பாராட்டினார். உதவி மேலாளர் விஜயன், காசாளர் திலீப் குமார் ஆகியோர் உடனிருந்்தனர்.


Next Story