பருத்தியில் இலை கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


பருத்தியில் இலை கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
x

பருத்தியில் இலை கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பாபநாசம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்

பாபநாசம்:

பருத்தியில் இலை கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பாபநாசம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் ெதரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பருத்தி சாகுபடி

பாபநாசம் வட்டாரத்தில் பருத்தி அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் காற்றின் ஈரப்பதம் மற்றும் வெப்பத்தின் காரணமாக பருத்தியில் பாக்டீரியல் இலை கருகல் நோய் பாதிப்பு ஏற்பட அதிக அளவு வாய்ப்புள்ளது.

இந்த நோயானது விதை இலைகளில் நீர் ஊறிய சிறிய புள்ளிகள் ஒழுங்கற்றதாக காணப்பட்டு இறுதியாக இலை உதிர்ந்து விடும். இளஞ் செடிகளில் புதிதாக தோன்றும் இலைகளும் பாதிக்கப்பட்டு உதிர்ந்துவிடும்.

இலை கருகல் நோய்

இலையின் அடி புறத்தில் கருப்பு நிற புள்ளிகள் நரம்புகளால் கட்டுப்படுத்தப்பட்டு கோண வடிவத்தில் காணப்படும். நடுநரம்பு கிளை நரம்புகளின் நுனியில் நீர்க்கசிவு தோன்றி கருப்பு நிறமாக மாறும். இந்த நோயானது பருத்தி காய்களையும் தாக்கும் தன்மை கொண்டது. தேவையற்ற களை செடிகளை வயலில் இருந்து அகற்றிட வேண்டும். இலை கருகல் நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் பாக்ட்ரியா கொல்லி மருந்துகளான ஒரு எக்டருக்கு ஸ்ட்ரெப்டோ மைசின் சல்பேட் 300 பி.பி.எம். மற்றும் காப்பர் ஆக்ஸி குளோரைடு 2 கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

மகசூல் இழப்பை தடுக்கலாம்

மேலும் 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒருமுறை தெளிப்பதனால் இலை கருகல் நோயை கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story