நெற்பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


நெற்பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

நெற்பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்வேளாண் உதவி இயக்குனர் விளக்கம்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்போது மழை பெய்து வருவதால் நெற்பயிர்களை எலிகளிடம் இருந்தும் காப்பாற்றும் சூழலில் உள்ளோம். பொதுவாக எங்கெல்லாம் ஆட்டுக்கிடை உள்ளதோ, அந்த வயலில் எலி வாழாது. நொச்சி மற்றும் எருக்கலை செடியை வயலை சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை வராது. மேலும் நெல் வயில்களில் ஏக்கருக்கு 10 இடங்களில் பறவை குடில் அமைத்தால், இரவில் அவைகள் மேல் ஆந்தைகள் அமர்ந்து எலிகளை பிடித்து கொன்றுவிடும்.இதே போன்று காய்ந்த தென்னை மட்டைகளையும் தலைகீழாக சாய்த்து நட்டு வைத்தாலும் பறவைகள் அல்லது ஆந்தைகள் அதன் மீது அமர்ந்து பூச்சிகளையும் எலிகளையும் அழித்துவிடும். பொடித்த வேர்கடலை அரை கிலோஎள்ளு (வறுத்து, பொடித்தது), ¼ கிலோ வெல்லம், அரை கிலோ நெய் சிறிதளவு. சிமெண்ட் அரை கிலோ ஆகியவற்றை பாத்திரத்தில் நன்கு கலந்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி வரப்பில் உள்ள எலிவளைகளில் வைத்தால் எலிகள் கடலையின் வாசனையால் சாப்பிடும். இந்த உருண்டைகளில் உள்ள சிமெண்டு எலிகளின் வயிற்றில் சென்று இறுகி விடுவதால் அவை இறந்து விடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story