நெற்பயிர்களில் ஆணைக்கொம்பன் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


நெற்பயிர்களில் ஆணைக்கொம்பன் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களில் ஏற்பட்டுள்ள ஆணைக்கொம்பன் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தம் வழிமுறைகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் விளக்கம் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களில் ஏற்பட்டுள்ள ஆணைக்கொம்பன் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தம் வழிமுறைகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்துஞ அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பருவமழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி 67 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெற் பயிர்கள் வளர்ச்சி மற்றும் தண்டு உருளும் நிலையில் உள்ளது.இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களில் ஆணைக்கொம்பன் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.

ஆணைக்கொம்பன் பூச்சி தாக்குதல்

இந்த ஆணைக்கொம்பன் பூச்சி தாக்கிய நெற்பயிர்களின் தண்டு குழாய் போல் மாறி வெளிர் பச்சை நிறத்தில் பார்ப்பதற்கு வெங்காய இலை போன்று தோற்றமளிக்கும். இந்த நோய் தாக்குதல் காரணமாக நெற்பயிர் குருத்துக்களில் நெற்கதிர் உருவாகாமல் தடுக்கப்படுகிறது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.இப்பூச்சியின் தாக்கம் நெல் தண்டு உருளும் பருவத்திற்கு முன் உள்ள பயிரில் அதிகமாக காணப்படுகிறது. பொதுவாக நெல் சாகுபடிக்கு முன்பு கோடை உழவு செய்தல் நல்லது.

பொட்டாஷ் உரம்

மேலும், பொட்டாஷ் உரத்தினை பரிந்துரைக்கப்பட்ட அளவினை பயன்படுத்த வேண்டும். வயல்களில் ஒளிப்பொறி வைத்து தாய் பூச்சிகளை கண்காணிக்கலாம்.பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளான பிப்ரோனில் 0.3 சதவீதம் ஏக்கருக்கு 7 கிலோ அல்லது தயோமீத்தாக்சம் 25 சதவீதம் ஏக்கருக்கு 40 கிராம் அல்லது கார்போ சல்பான் 25 சதவீதம் ஏக்கருக்கு 400 மி.லி. என்ற அளவில் தெளித்து ஆணைக்கொம்பன் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story