நெற்பயிர்களில் பூச்சி தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

நெற்பயிர்களில் பூச்சி தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெற்பயிர்களில் பூச்சி தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான வை. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நெற்பயிர்களில் பூச்சி தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான வை. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பூச்சி தாக்குதல்

நெல் விவசாயிகள் பொதுவாக பூச்சி தாக்குதல் ஏற்படும் பொழுது பூச்சிக்கொல்லி மருந்துகள் அடித்து கட்டுப்படுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. இதற்கு மாற்றாக இயற்கை வழியில் பல முறைகள் கடைபிடித்து பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.

இதன் மூலம் செலவும் குறைவு, பக்க விளைவுகள் இல்லாதது.

நெல்லில் கதிர் நாவாய் பூச்சியை கட்டுப்படுத்த வசம்பு பயிர் கிழங்குகளை மற்றும் இலைகளை அரைத்து தெளித்து எளிதாக கட்டுப்படுத்தலாம்.

வசம்பு பயிர்

கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கும் தானியங்களை அந்து பூச்சி வராமல் பாதுகாக்க வசம்பு கிழங்குகளை போட்டு வந்திருந்தால் பூச்சிகள் அண்டாது. செலவில்லாத வசம்பு பயிரை இயற்கை விவசாயிகள் மட்டுமல்லாது.

மற்ற விவசாயிகளும் ஒரு சென்ட் அளவில் பயிரிட்டு இயற்கை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த வேண்டும். பல விவசாயிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் மாதிரி திடலில் அமைக்கப்பட்ட விதை நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.

முன் பதிவு

ஒரு விதை நாற்றின் விலை ரூ 2. ஆர்வம் உள்ள விவசாயிகள் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

Next Story