மேட்டுநாசுவம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு


மேட்டுநாசுவம்பாளையம்  கிராம நிர்வாக அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
x

மேட்டுநாசுவம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஈரோடு

மேட்டுநாசுவம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

பதிவேடுகளை பார்வையிட்டார்

ஈரோடு ஊராட்சி ஒன்றியம் மேட்டு நாசுவம்பாளையம் வடக்கு நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளான 'ஆ' பதிவேடு, கிராம கணக்கு பதிவேடு, அடங்கல், முதியோர் உதவித்தொகை பதிவேடு, புறம்போக்கு நிலங்கள் தொடர்பான பதிவேடு, விளை நிலங்கள் தொடர்பான பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு

மேலும் மேட்டுநாசுவம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தினையும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story