மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
சேலம்
மேட்டூர்,
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழை தீவிரம் அடையும் நேரங்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், மழை குறையும் நேரங்களில் நீர்வரத்து குறைந்தும் வருகிறது.இந்தநிலையில் நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 268 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 6 ஆயிரத்து 922 கனஅடியாக குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 109.29 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
Related Tags :
Next Story