மேட்டூர் அணை நீர்மட்டம் 70 நாட்களுக்கு பிறகு 120 அடிக்கு கீழ் குறைந்தது


மேட்டூர் அணை நீர்மட்டம் 70 நாட்களுக்கு பிறகு 120 அடிக்கு கீழ் குறைந்தது
x

மேட்டூர் அணை நீர்மட்டம் 70 நாட்களுக்கு பிறகு 120 அடிக்கு கீழ் குறைந்தது

சேலம்

மேட்டூர்,

மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி காலை தனது உச்ச நீர்மட்டமான 120 அடியை எட்டி நிரம்பியது. அதன்பிறகு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் 16 கண் மதகுகள் வழியாக அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தாலும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியிலேயே நீடித்தது. நேற்று நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரத்து 456 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதமும், கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது. அதாவது 70 நாட்களுக்கு பிறகு 120 அடிக்கு கீழ் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.95 அடியாக இருந்தது.


Next Story