மேட்டூர் அணை நீர்மட்டம் 118.31 அடியாக சரிந்தது


மேட்டூர் அணை நீர்மட்டம் 118.31 அடியாக சரிந்தது
x

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணை நீர்மட்டம் 118.31 அடியாக சரிந்தது.

சேலம்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 4,081 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 3,942 கன அடியாக சரிந்தது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் காவிலி ஆற்றிலும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 400 கன அடியும் தண்ணீர் கால்வாயிலும் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை காட்டிலும், திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 118.79 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணிக்கு 118.31 அடியாக சரிந்தது.


Next Story