மேட்டூர் அணையில் மேற்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு
மேட்டூர் அணையில் மேற்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
சேலம்
மேட்டூர்:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நாளை (திங்கட்கிழமை) தண்ணீர் திறந்து வைக்கிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) விஜயகுமார் ஆகியோர் மேட்டூர் அணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இது மட்டுமின்றி முதல்-அமைச்சரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரும் அணைக்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் விழாவிற்கான மேடைகள் அமைக்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
Next Story