மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா-பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கட்சியினர் கொண்டாட்டம்


மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா-பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கட்சியினர் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவையொட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா தர்மபுரி மாவட்டத்தில் கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அந்தந்த பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைகள் மற்றும் உருவப்படங்களுக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நல உதவிகளை வழங்கினர்.

தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து அங்குள்ள ஜெயலலிதா உருவ சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, தர்மபுரி ஒன்றிய குழு தலைவர் நீலாபுரம் செல்வம், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் தகடூர் விஜயன், பழனிசாமி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், சிவப்பிரகாசம், பழனி, கூட்டுறவு சங்க தலைவர் அங்குராஜ், நகர நிர்வாகிகள் அறிவாளி, சுரேஷ், பார்த்திபன், வேல்முருகன் மற்றும் நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம்

நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இண்டூர், சோமனஅள்ளி, சோழப்பாடி, பாலவாடி, தலவாய்அள்ளி, நத்தஅள்ளி, ராஜாகொல்லஅள்ளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சி.பழனி தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். உருவ சிலை மற்றும் உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவையொட்டி பல்வேறு கிராமங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.

விழாவில் ஒன்றிய அவைத்தலைவர் வேடி, ஒன்றிய துணை செயலாளர் சக்தி, மாவட்ட பிரதிநிதிகள் தனபால், கணேசன், லட்சுமி ஜெமினி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சாலா கன்னியப்பன், முனியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயன், தேவராஜ், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி முனிராஜ், கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதியமான்கோட்டை

நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் அதியமான்கோட்டையில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் முனிராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

விழாவில் கூட்டுறவு வங்கி தலைவர்கள் அம்மாசி, அருவி, கிளை செயலாளர் பிரேம்குமார், கட்சி நிர்வாகிகள் மனோகரன், கிருஷ்ணன், ரிஷி, தண்டபாணி, வேலு, ராமன், கொளந்தைசாமி, மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பெரியாம்பட்டி

காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டியில் அ.தி.மு.க. மாணவரணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஒன்றிய மாணவரணி செயலாளரும், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனருமான ரவிசங்கர் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் தென்னங்கன்றுகளை வழங்கினார்.

இதில் நிர்வாகிகள் சந்திரன், கணபதி, ஆதிலட்சுமி, சம்பத், ரமேஷ், வள்ளி, சாந்தகுமார், முன்னாள் கவுன்சிலர் குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாட்லாம்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கோபி, வேலன், சிங்காரவேலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாரண்டஅள்ளி

மாரண்டஅள்ளியில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் செந்தில், முன்னாள் கவுன்சிலர் கண்ணன், காசிநாதன், வெங்கடேசன், செல்வம், சுரேஷ், சாமனூர் கிளை செயலாளர் சிவம், ரவி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிளை செயலாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாரண்டஅள்ளி பேரூர் செயலாளர் கோவிந்தன் செய்திருந்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

அதகபாடி ஊராட்சிக்குட்பட்ட ஏரிகோடிப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. எ.செக்காரப்பட்டி கூட்டுறவு வங்கி தலைவர் சின்னசாமி தலைமை தாங்கி, எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் கதிரவன், ஆறுமுகம், செல்வம், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story