எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
பேய்க்குளத்தில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு பேசினார்.
தட்டார்மடம்:
பேய்க்குளத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய செயலாளர் செம்பூர் ராஜ் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஞானப்பிரகாசம், ஒன்றிய செயலாளர் காசிராஜன், ஆழ்வார்திருநகரி பேரூராட்சி செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் ஜீவ கணேசன், இளமுருகன், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல் சாத்தான்குளம் ஒன்றிய விவசாய அணி செயலாளர் பால்துரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், சுதாகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் ஆழ்வார்திருநகர் யூனியன் முன்னாள் கவுன்சிலர் ராபர்ட் சிங் தலைமையில் பலர் தி.மு.க.விலிருந்து விலகி சண்முகநாதன் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தனர்.