எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை
எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் டி.டி. குமார் தலைமையில் நடந்தது. அவைத்தலைவர் ஜி.ரங்கநாதன் வரவேற்றார். துணைச் செயலாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துைண செயலாளர் டாக்டர் லீலா சுப்ரமணியம், கூட்டுறவு சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியம், நகராட்சி கவுன்சிலர் டி.டி.சி.சங்கர், ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் என்.திருப்பதி, சி.செல்வம், ஆர்.ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் யுவராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் தம்பா கிருஷ்ணன் நன்றி கூறினார்.