எம்.ஜி.ஆர். சிலை, ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
அ.தி.மு.க. பொன்விழா நிறைவையொட்டி எம்.ஜி.ஆர்.சிலை, ெஜயலலிதா படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. பொன்விழா நிறைவையொட்டி எம்.ஜி.ஆர்.சிலை, ெஜயலலிதா படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
51-வது ஆண்டு தொடக்க விழா
அ.தி.மு.க. தொடங்கப்பட்டு பொன்விழா ஆண்டு நிறைவடைந்து நேற்று 51-ம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதையொட்டி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல் தலைமையில் கோர்ட்டு அருகில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதுபோல், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதுபோல் புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் சோமரசம்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு முன்னாள் எம்.பி. குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
துறையூர்
துறையூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 51-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சிங்களாந்தபுரம் ஊராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ஏழைகளுக்கு இலவச வேட்டி-சேலை, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உப்பிலியாபுரம் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் மனோகரன், சிங்களாந்தபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜதுரை, துறையூர் ஒன்றிய குழு முன்னாள் துணைத் தலைவர் பாலசுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.