எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
தென்காசி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். நினைவு தினம்
சங்கரன்கோவில் நகர அ.தி.மு.க. சார்பில் பழைய பஸ் நிலையம் அருகில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினரும், மகளிர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
இதில் நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப அணி செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி
தென்காசி நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தென்காசி சுவாமி சன்னதி பஜாரில் எம்.ஜி.ஆர். உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நகரச் செயலாளர் சுடலை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் கலந்து கொண்டு மரியாதை செய்தார். இதில் மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சிவசீதாராமன், எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி வெள்ளபாண்டி, மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழப்பாவூரில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி. கே.ஆர்.பி. பிரபாகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் ஒன்றிய செயலாளர் கே.ஆர்.பால்துரை, தலைமை கழக பேச்சாளர்கள் அப்பாதுரை, மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுரண்டை
சுரண்டை நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. சுரண்டை பஸ் நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் வி.கே.எஸ். சக்திவேல் தலைமை தாங்கினார். கோட்டூர்சாமி பாண்டியன், மணிக்குட்டி, பாலமுருகன், தேனம்மாள் தங்கராஜ், அமராவதி சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
இதில் சுரண்டை நகராட்சி கவுன்சிலர்கள் பொன்ராணி, வசந்தன், செயற்குழு உறுப்பினர் சிவசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுரண்டை அண்ணா சிலை அருகே நடந்த நிகழ்ச்சிக்கு சுரண்டை நகராட்சி துணை தலைவர் சங்கராதேவி முருகேசன் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் மாரியப்பன், ராஜேஷ், மற்றும் நிர்வாகிகள் சாமி, செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை
செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா ஆலோசனையின் பேரில் நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நகர செயலாளா் கணேசன் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவா் தங்கவேலு, நகர துணைச்செயலாளா் பூசைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனா். அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.