எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
நெல்லையில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நெல்லையில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அ.தி.மு.க.
அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா கே.பரமசிவன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்.பி. முத்துகருப்பன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பொருளாளர் சவுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், ஆர்.பி.ஆதித்தன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மகளிர் அணி செயலாளரும், திசையன்விளை பேரூராட்சி தலைவருமான ஜான்சிராணி, ஒன்றிய செயலாளர் முத்துகுட்டி பாண்டியன், இளைஞர் அணி ஸ்ரீவை சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பிலும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அ.ம.மு.க.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் பரமசிவன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தே.மு.தி.க. சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் சின்னத்துரை, மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் கலைவாணன், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் மாரியப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.எஸ்.முருகன், பகுதி செயலாளர்கள் ராஜ், அந்தோணி, மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் வேல்பாண்டி, சின்னத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இட்டமொழி-வள்ளியூர்
இட்டமொழியில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி நாங்குநேரி தொகுதி செயலாளர் சி.டென்சிங் சுவாமிதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் கணபதி ஆசாரி, பொன்ராஜ், சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வள்ளியூர் பழைய பஸ் நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் பொன்னரசு, அவைத்தலைவர் கண்ணன், முன்னாள் நகர செயலாளர் வென்னிமலை, மாவட்ட பொறுப்பாளர்கள் சந்திரமோகன், எட்வர்டு சிங், பழக்கடை கோபால், சங்கரலிங்கம், இந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.