1300 ஆண்டு பல்லவர் கால நடுகற்கள் கண்டுபிடிப்பு


1300 ஆண்டு பல்லவர் கால நடுகற்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே 1300 ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் கால நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே 1300 ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் கால நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல்லவர் கால நடுகற்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா குன்னத்தூர் கிராமத்தில் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தை சேர்ந்த 2 நடுகற்களும், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதியை ஆண்ட நுளம்பர்களின் பழங்கன்னடப் பொறிப்புள்ள நடுகல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. செங்கம் நகரில் இயங்கும் செங்கண்மா வரலாற்று நடுவத்தை சேர்ந்த பிரேம்ஆனந்த் இந்த நடுகற்களை கண்டுபிடித்துள்ளார்.

பல்லவர் காலத்தை சேர்ந்த இந்த நடுகற்களை தொல்லியல் துறையை சேர்ந்த பூங்குன்றன் நேரில் ஆய்வு செய்தார். அதில், முதல் நடுக்கல்லில், சாத்தனாதி சேத்தன் என்பவர் பொருமந்தைகளை மீட்கும் போது இறந்துள்ளார் என்பதை குறிப்பிட்டுள்ளார். 2-ம் நடுகல்லில் சில சொற்களை தவிர படிக்க இயலாதவாறு மிகவும் தேய்ந்துள்ளது.

போரில் இறந்த வீரன்

இதேபோன்று 3-ம் நடுகல், நுளம்பர் காலத்தை சேர்ந்தது. நுளம்ப மன்னன் அன்னிகன் வெட்டியது. இந்த வீரக்கல்வெட்டு, குன்னத்தூர் கிராமத்திற்கு வெளியே உள்ள வயல்களில் காணப்படுகிறது. இது கன்னட மொழி மற்றும் 9-ம் நூற்றாண்டின் எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. மற்றும் அன்னிகாவின் ஆட்சிக்கு சொந்தமானது.

அன்னிகா மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்த போது, போரில் இறந்த வீரன் அனிம்த்யாவின் மரணத்தை பதிவு செய்துள்ளது. இந்த கல்வெட்டில் கன்னட பேச்சுவழக்கு பயன்படுத்தப்பட்டது. இது உள்ளூர் மக்களால் பயன்பாட்டில் இருந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.


Next Story