புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்-தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுரை


புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்-தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுரை
x
தினத்தந்தி 31 Dec 2022 12:59 AM IST (Updated: 31 Dec 2022 3:26 PM IST)
t-max-icont-min-icon

வெளிமாநிலம் அல்லது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் அறிவுரை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கரூர்

எடை அளவு சட்டம்

தொழிலாளர் நலத்துறை மூலம் எடை அளவு சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம், மோட்டார் போக்குவரத்து நிறுவன சட்டம், ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிவு சான்றுகள் புதுப்பித்தல் ஆகியவை இணைய வழி மூலம் உரிய கட்டணம் செலுத்தி ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதுப்பித்தல் வேண்டும்.மேலும் சட்டமுறை எடையளவுகள் சட்டத்தின் கீழ் தயாரிப்பாளர்கள், இறக்குமதி செய்பவர்கள், பொட்டலம் இடுபவர்கள், பொட்டலப் பொருள் விதிகளின் கீழ் பதிவுச் சான்று இணைய வழி மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

தொழிலாளர் நல நிதி

2022-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியினை அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் தொழிலாளர் பங்களிப்பு ரூ.20, வேலை அளிப்பவர் பங்களிப்பு ரூ.40 என மொத்தம் ரூ.60/- செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி, தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரிக்கு டி.டி. அல்லது காசோலை, https://wwwlwb/tn/.gov.in என்ற இணையதள மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.

தொழிலாளர் நல நிதி செலுத்தாத நிறுவனங்கள் ஆய்வின் போது கண்டறியப்படும் போது தொழிலாளர் நலத்துறை அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் தொழிலாளர் நலநிதி வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெளிமாநில தொழிலாளர்கள்

மேலும் தொழிலாளர் நலன் கருதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி கடைகள், நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு போதிய இருக்கை, இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தொழிலாளர் நல ஆய்வாளர்களின் முறையான ஆய்வின் சமயம் முரண்பாடு கண்டறியப்பட்டால் தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிமாநிலம் அல்லது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவரங்களை வேலை அளிப்பவர்கள் https://labour.tn.gov.in/ism/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story