நாகூர் தர்கா அலங்கார வாசலில் மிலாது விழா
நாகூர் தர்கா அலங்கார வாசலில் மிலாது விழா நடந்தது.
நாகப்பட்டினம்
நாகூர்:
நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு நாகூரில் அர் ரவூப் மிலாது கமிட்டி சார்பில் நாகூர் தர்கா அலங்கார வாசலில் மிலாது விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நாகூர் தர்கா சாஹிமார்கள் சங்க தலைவர் ஹசன்குத்தூஸ்சாஹிபு தலைமை தாங்கினார். நாகூர் தர்கா ஆலோசனை குழு தலைவரும், தமிழக ஹஜ்கமிட்டி உறுப்பினருமான, செய்யது முகமது கலிபா சாஹிபு முன்னிலை வகித்தார். இதில் அரபி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள், பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஜெக்கரிய்யா இஸ்லாமிய இன்னிசை கஞ்சேரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அர் ரவூப் மிலாது கமிட்டி, ஒருங்கிணைப்பாளர்கள் சுல்தான் சாஹிபு, தம்பிசாஹிபு ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story