முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பாக மிலாடி நபி மாநாடு


முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பாக மிலாடி நபி மாநாடு
x

மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பாக மிலாடி நபி மாநாடு முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் ராஜாஹசன் தலைமையில் தெற்கு வெளி வீதி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது

மதுரை


மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பாக மிலாடி நபி மாநாடு முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் ராஜாஹசன் தலைமையில் தெற்கு வெளி வீதி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் உயர்மட்ட குழு, மதுரை மாநகர் அனைத்து ஜமாத்தின் நிர்வாகிகள், ஜமாத்துல் உலமா நிர்வாகிகள் மற்றும் மதுரை மாவட்ட இஸ்லாமிய சமூக பேரமைப்புகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் செயலாளர் நிஷ்தார் அகமது வரவேற்றார். முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி நஜ்முதீன் மற்றும் ஐக்கிய ஜமாத் முன்னாள் செயலாளர் ஹாஜி அப்துல்காதர், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் செய்தி தொடர்பாளர் ஆரிப்கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் பிஸ்மில்லாஹ் கான் தொகுப்புரை ஆற்றினார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் ஹாஜி அப்துல்ரகுமான், கவிமாமணி- பேராசிரியர் முனைவர் ஹாஜி அப்துல்காதர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முடிவில், முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பொருளாளர் ஹாஜி அப்துல்காதர் நன்றி கூறினார். முன்னதாக மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் தெற்கு வாசல் முஸ்லிம் மிஷன் மருத்துவமனை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


Next Story