கோத்தகிரியில் நிலவும் இதமான காலநிலை:கோடநாடு காட்சிமுனையில் குவிந்து சுற்றுலா பயணிகள்-இயற்கை அழகுகளை ரசித்தனர்


கோத்தகிரியில் நிலவும் இதமான காலநிலை:கோடநாடு காட்சிமுனையில் குவிந்து சுற்றுலா பயணிகள்-இயற்கை அழகுகளை ரசித்தனர்
x
தினத்தந்தி 23 Sept 2022 12:30 AM IST (Updated: 23 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் இதமான காலநிலை நிலவுவதால் கோடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இயற்கை அழகுகளை கண்டு ரசித்தனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் இதமான காலநிலை நிலவுவதால் கோடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இயற்கை அழகுகளை கண்டு ரசித்தனர்.

கோடநாடு காட்சிமுனை

கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் முக்கியமான ஒன்றாக கோடநாடு காட்சி முனை அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கோத்தகிரியில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்திலிருந்து சுமார் 6500 அடி உயரத்தில் உள்ள கோடநாடு காட்சி முனைக்கு சென்று, அங்குள்ள காட்சி முனை தொலைநோக்கி மூலமாக தாழ்வான பகுதியில் உள்ள பவானிசாகர் அணைக்கட்டு, தெங்குமரஹாடா, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளிப் பகுதிகள், ரங்கசாமி மலை, மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்டவற்றை கண்டுகளித்து வருகின்றனர். இந்த காட்சிமுனை கோத்தகிரி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இயற்கை அழகுகளை ரசித்த சுற்றுலா பயணிகள்

இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவியதன் காரணமாக கோடநாடு காட்சி முனையில் இருந்து சமவெளிப் பகுதிகளைக்காண முடிஎவில்லை. இருப்பினும் சமவெளிகளை மூடிய அழகிய மேகக் கூட்டங்கள் கடல் அலைகள் போல காட்சியளித்ததை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து சென்றனர்.

கடந்த சில தினங்களாக மழை பெய்வது நின்று, இப்பகுதியில் இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் கோடநாடு காட்சி முனையைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அவர்கள் அங்கு வந்து இயற்கை அழகுகளை வந்து கண்டுகளித்து செல்கின்றனர். இதனால் காட்சி முனை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.


Next Story