அணைக்கட்டு முனியப்பனுக்கு பால் அபிேஷகம்
சேலம்
மேட்டூர்:-
மேட்டூர் அணை அருகே அணைக்கட்டு முனியப்பன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இந்த கோவில் அருகே ஏராளமான உணவு விடுதி மற்றும் மீன் வறுவல் கடைகள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இந்த கோவில் அருகே உள்ள கடைக்காரர்கள் சார்பில் முனியப்பன் கோவில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு முனியப்பன் கோவில் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல்வேறு அபிஷேகங்கள் அணைக்கப்பட்டு முனியப்பனுக்கு நடைபெறும். நேற்று காலை காவிரி ஆற்றில் இருந்து முனியப்பன் கோவிலுக்கு தீர்த்தக்குடம் கடைக்காரர்கள் சார்பில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமிக்கு 600 லிட்டர் பால் அபிஷேகம் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன.
Next Story