பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x

ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழாவில் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் வைகாசி பெருந்திருவிழா தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி புறப்பாடு நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம், அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம், அக்னி சட்டி எடுத்து கொண்டு கோவிலுக்கு வந்தனர்.

அதே போல உருவபொம்மை, ஆயிரங்கண்பானை, 21 அக்னிச்சட்டி, கரும்புதொட்டிலில் குழந்தைகளை எடுத்துவருதல், கரும்புள்ளி, செம்புள்ளிகுத்தி வருதல், அலகு குத்தி வருதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனையும் பக்தர்கள் செலுத்தினார்கள்.

சோழவந்தான் பேரூராட்சி சார்பாக வைகை ஆற்றை சுத்தம் செய்து கூடுதலாக மின்விளக்கு, குடிநீர்வசதி, கழிப்பறைவசதி செய்திருந்தனர். பக்தர்கள் செல்லக்கூடிய இடங்களில் டிராக்டர்களில் வாட்டர் டேங்க் அமைத்து ரோடுகளில் தண்ணீர் தெளித்தனர். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக சோழவந்தான் முஸ்லிம் ஜமாத் மற்றும் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் பக்தர்களை வரவேற்று பேனர் வைத்திருந்தனர். இரவு வைகை ஆற்றில் இருந்து பூப்பல்லக்கில் அம்மன் பவனி வந்து கோவிலை வந்தடைந்தது.சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


Related Tags :
Next Story