கொள்முதல் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் 28-ந் தேதி முதல் போராட்டம் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


கொள்முதல் விலையை உயர்த்த கோரி  பால் உற்பத்தியாளர்கள் 28-ந் தேதி முதல் போராட்டம்  மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x

கொள்முதல் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் 28-ந் தேதி முதல் போராட்டம் நடத்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம்

சேலம்,

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராமசாமி, துணைத்தலைவர் அரிகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு 1 லிட்டர் பசும்பாலுக்கு ரூ.42-ஆகவும், எருமை பாலுக்கு ரூ.51-ஆகவும் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், ஆவின் பால் கொள்முதலில் ஐ.எஸ்.ஐ. பார்முலாவை பயன்படுத்த வேண்டும், 50 சதவீதம் மானிய விலையில் கால்நடை அடர்தீவனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28-ந் தேதி முதல் மாநில முழுவதும் பால் நிறுத்த போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் துணைத்தலைவர்கள் கோவிந்தபாண்டியன், பெரியண்ணன், மண்டல செயலாளர் சின்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story