பால் வேன் மோதி சுற்றுச்சுவர் சேதம்
திற்பரப்பு அருகே பால் வேன் மோதி சுற்றுச்சுவர் சேதம்
கன்னியாகுமரி
குலசேகரம்,
கடையாலுமூடு அருகே உள்ள தனியார் பால் நிறுவனத்தை சேர்ந்த பால் வேன் நேற்று முன்தினம் அதிகாலையில் குலசேகரம்-திற்பரப்பு சாலையில் சென்று கொண்டிருந்தது. வேனை கற்றுவா என்ற இடத்தைச் சேர்ந்த ஷைஜூ ஓட்டிச் சென்றார். இந்நிலையில் திற்பரப்பு பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பால் வேன் அங்கு நின்ற தொலைபேசி கம்பத்தை சாய்த்து விட்டு அருகிலுள்ள சுற்றுச்சுவரில் மோதியது. இதில் 3 வீடுகளின் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது வேன் டிரைவர் ஷைஜூ காயமடைந்த நிலையில் வேனில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பு வைத்தனர். இதுகுறித்து குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story