நூல் மில்லில் தீ விபத்து


நூல் மில்லில் தீ விபத்து
x

ஊத்துக்குளி அருகே நூல் மில்லில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மற்றும் நூல்கள் தீயில் கருகி சாம்பலாகின.

திருப்பூர்

ஊத்துக்குளி

ஊத்துக்குளி அருகே நூல் மில்லில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மற்றும் நூல்கள் தீயில் கருகி சாம்பலாகின.

இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நூல் மில்லில் தீ

ஊத்துக்குளி ெரயில் நிலையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 35). இவர் பல்லகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருடன் இணைந்து ஊத்துக்குளி அருகே உள்ள கஸ்தூரிபாளையம் ஊராட்சி பகுதியில் நூல் மில் வைத்து நடத்தி வருகிறார். இதற்காக குடோன் அமைத்து பனியன் கழிவு துணிகள் மற்றும் பஞ்சுகளை இருப்பு வைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை குடோனில் திடீரென தீப்பிடித்து எரியத் ெதாடங்கியது. இதை பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து ஊத்துக்குளி போலீசாருக்கும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

பல லட்சம் சேதம்

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சாம்பலாகியது. அதன் மதிப்பு உடனடியாக தெரியவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊத்துக்குளி சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. திருப்பூரில் இருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள் அதிக அளவு பொருள் சேதம் ஏற்படுகிறது. எனவே ஊத்துக்குளி பகுதியில் உடனடியாக தீயணைப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story