பள்ளத்தில் விழுந்து மில்தொழிலாளி சாவு


பள்ளத்தில் விழுந்து மில்தொழிலாளி சாவு
x

கன்னிவாடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற மில்தொழிலாளி பள்ளத்தில் தவறி விழுந்து பலியானார்.

திண்டுக்கல்

கன்னிவாடி அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் பிரேம்குமார் (வயது 25). மில் தொழிலாளி. இவர் கடந்த மாதம் 31-ந்தேதி வேடசந்தூரில் உள்ள தனியார் மில்லில் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தெத்துப்பட்டி அருகே உள்ள பைபாஸ் சாலையில் பாலம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் அவர் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரேம்குமார் இறந்தார். இதுகுறித்து கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த பிரேம் குமாருக்கு சங்கீதா (23) என்ற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story