மினி பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 11 பேர் காயம்
மினி பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 11 பேர் காயம்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் போலீஸ் சரகம் புஷ்பவனம் கரைமேடு என்ற இடத்தில் நாலுவேதபதியில் இருந்து வேதாரண்யம் நோக்கி ஒரு தனியார் மினி பஸ் சென்று கொண்டிருந்தது. வேதாரண்யத்தில் இருந்து நாலுவேதபதி நோக்கி மற்றொரு மினி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த புஷ்பவனம் பகுதியை சேர்ந்த வீரப்பன் (வயது55), சுதா (43) உள்பட 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story