சாலையோர பள்ளத்தில் மினிலாரி கவிழ்ந்து விபத்து


சாலையோர பள்ளத்தில் மினிலாரி கவிழ்ந்து விபத்து
x

ஆற்காட்டில் சாலையோர பள்ளத்தில் மினிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ராணிப்பேட்டை

ஆற்காடு பூபதி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து மினி லாரியில் கர்நாடக மாநிலத்திற்கு கனரக வாகனத்துக்கான என்ஜின் பாகத்தை ஏற்றி வந்துள்ளார். ஆற்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக ஆற்காட்டில் இருந்து செய்யார்-திண்டிவனம் செல்லும் பைபாஸ் சாலையில் சென்றுள்ளார். அப்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் லாரி டிரைவர் கோபால் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான மினி லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story