மினி மாரத்தான் போட்டி
சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி எய்ட்ஸ் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி தேனியில் நேற்று நடந்தது.
தேனி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி எய்ட்ஸ் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி தேனியில் நேற்று நடந்தது.மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட விளையாட்டு அரங்கு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கம்பம் சாலை வழியாக பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மில் வரை இந்த மினி மாரத்தான் நடந்தது. இதில் முதலிடம் பிடித்தவருக்கு ரூ.10 ஆயிரம், 2-வது இடம் பிடித்தவருக்கு ரூ.7 ஆயிரம், 3-வது இடம் பிடித்தவருக்கு ரூ.5 ஆயிரம் என பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அத்துடன் மேலும் 7 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.1,000 வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் முகமது பாருக், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.