மினி மாரத்தான் போட்டி
பாளையங்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை அரசு போக்குவரத்து மற்றும் விரைவு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. சங்கம் சார்பில் நேற்று காலையில் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சாலை விபத்துகளை தவிர்ப்பது, பொது போக்குவரத்தை பலப்படுத்துவதை வலியுறுத்தி இந்த மினி மாரத்தான் போட்டி நடந்தது.
பாளையங்கோட்டை அண்ணா மைதானத்தில் தொடங்கி சீனிவாசநகர் சென்று மீண்டும் அண்ணா மைதானத்தில் முடிவடைந்தது.
இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story