தேனியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி


தேனியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 13 Feb 2023 2:00 AM IST (Updated: 13 Feb 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது.

தேனி

தேனியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது.

மினி மாரத்தான்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது போக்குவரத்தை மேம்படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல், விபத்தில்லா பயணம் செய்தல் ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு மினிமாரத்தான் தமிழகத்தில் பல நகரங்களில் நேற்று நடந்தது. அதன்படி, தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் (சி.ஐ.டி.யு.) சங்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.

பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு மினிமாரத்தான் போட்டியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதி தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக மினி மாரத்தான் நடந்தது. இதில், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

6 வயது சிறுவன்

ஆண்களுக்கான மினிமாரத்தான் பணிமனையில் இருந்து தொடங்கி கம்பம் சாலை, நேரு சிலை சிக்னல், பெரியகுளம் சாலை, பழைய அரசு ஆஸ்பத்திரி சாலை, சமதர்மபுரம், பாரஸ்ட்ரோடு, மதுரை சாலை, கம்பம் சாலை வழியாக மீண்டும் பணிமனையில் நிறைவு பெற்றது. பெண்களுக்கான மினிமாரத்தான் பணிமனையில் இருந்து தொடங்கி கம்பம் சாலை, நேரு சிலை சிக்னல், மதுரை சாலை, பங்களாமேடு திட்டச்சாலை, கம்பம் சாலை வழியாக மீண்டும் பணிமனையில் நிறைவடைந்தது.

போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதில், தேனியை சேர்ந்த 6 வயது சிறுவன் சர்வன் 6 கி.மீ. தூரம் முழுமையாக ஓடி, மினி மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்தார். சிறுவனை பாராட்டி ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், சி.ஐ.டி.யு. துணை பொதுச்செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாமலை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story