மணல் கடத்திய மினி வேன் பறிமுதல்
நெமிலி அருகே மணல் கடத்திய மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த பள்ளூர் கிராமத்தில் உள்ள பம்ப் அவுஸ் அருகே மினிவேனில் நள்ளிரவில் மர்மநபர்கள் மணல் கடத்துவதாக அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பள்ளூர் வருவாய் ஆய்வாளர் பிள்ளையார், அரக்கோணம் கிராமநிர்வாக அலுவலர் கலைவாணன், கிராம உதவியாளர்கள் வினோத்குமார், அஜந்தபிரியன் ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு சென்றார். அதிகாரிகளை பார்த்ததும் அங்கு மணல் கடத்த முயன்ற நபர்கள் மினிவேனை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். அதைத்தொடர்ந்து ஒரு யூனிட் மணலுடன் வேனை பறிமுதல் செய்து நெமிலி போலீஸ் நிலையத்தில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இரவு நேரங்களில் நெமிலி போலீசார் தொடர்ந்து இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story