மினிலாரி டிரைவர் பலி
திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டி மினிலாரி டிரைவர் பலியானார்.
திண்டுக்கல்லை அடுத்த குளத்தூர் எருமநாயக்கன்பட்டி பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த மினிலாரி டிரைவர் மூர்த்தி (வயது 48) என்பது தெரியவந்தது.
மேலும் அவருடைய உடல் சிதைந்து இருந்தது. எனவே அவர் தண்டவாளத்தை கடக்கும் போது அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு இறந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.