அத்திக்கடவு-அவினாசி திட்டம் ஜனவரியில் செயல்பாட்டுக்கு வரும்- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால், வருகிற ஜனவரியில் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்து உள்ளார்.
பவானி
அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால், வருகிற ஜனவரியில் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்து உள்ளார்.
அமைச்சர் ஆய்வு
ஈரோடு மாநகர பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்ட பணிகள் பவானியை அடுத்த சன்னியாசிப்பட்டி ஊராட்சி காவிரி ஆற்றங்கரையில் நடைபெற்று வருகிறது.
இதற்காக 120 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அங்கு அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுமக்களுக்கு பயன்பாட்டுக்கு...
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பவானி காலிங்கராயன் தடுப்பணையில் நடைபெற்று வரும் அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகளை வருகிற ஜனவரி மாதம் 15-தேதிக்குள் முடிக்க தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக இந்த பணிகள் தடைபட்டன. தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகள் முடிந்து வருகிற ஜனவரி மாதம் பொதுமக்்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.