அரசு நேரடிகொள்முதல் மையத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்


அரசு நேரடிகொள்முதல் மையத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்
x

முத்தூரில் அரசு நேரடிகொள்முதல் மையத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.

திருப்பூர்

முத்தூரில் அரசு நேரடிகொள்முதல் மையத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.

நெல் கொள்முதல் மையம்

முத்தூர், சின்னமுத்தூர், வேலம்பாளையம், ராசாத்தாவலசு, வள்ளியரச்சல், ஊடையம், மேட்டுப்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன விவசாயிகள் சாகுபடி செய்து உள்ள நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். விவசாயிகள் நெல்லை விற்று பலன் அடைவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் 3 அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி 3 அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களை திறந்து வைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

இதில் வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் கே.சந்திரசேகரன், முத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் மு.க. அப்பு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் வி.சக்திவேல், துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) கார்த்திகேயன் மற்றும் பேரூராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள், திருப்பூர் தெற்கு மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் தி.மு.க. நிர்வாகிகள், சுற்றுவட்டார விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story