தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.24 கோடியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட பணி
தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.24 கோடியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட பணிகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன்,கயல்விழி ஆய்வு செய்தனர்.
தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.24 கோடியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட பணிகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன்,கயல்விழி ஆய்வு செய்தனர்.
அமைச்சர்கள் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடியில் நடந்து வரும் கூடுதல் கட்டிடப்பணிகளை கலெக்டர் வினீத் தலைமையில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:-
தாராபுரம் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தாராபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இதில் தரைத்தளம் 865 ச.மீட்டரிலும், முதல் தளம் 820 ச.மீட்டரிலும், 2-ம் தளம் 820 ச.மீட்டரிலும், 3-ம் தளம் 820 ச.மீட்டரிலும், 4-ம் தளம் 820 ச.மீட்டரிலும், 5-ம் தளம் 820 ச.மீட்டரிலும், 6-ம் தளம் 820 ச.மீட்டரிலும் கட்டப்பட்டு வருகிறது.
6 தளங்கள்
தாராபுரம் அரசு மருத்துவமனையில் தரைத்தளத்தில் வரவேற்பறை கதிரியக்க அறை, சி.டி.ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் அறை ஆய்வகம் 2 எண்ணிக்கையிலும், அல்ட்ரா கதிர்வீச்சு அறை வெளிப்புற நோயாளிகளுக்கான இருதய சிகிச்சை அறை-மருந்தக இருப்பு அறைகளும், முதல்தளத்தில் டயாலிசிஸ் வார்டு பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, தீவிர சிகிச்சை பிரிவு பதிவறை, |மருந்து இருப்பு அறை, சாய்தளம் கழிவறை வசதிகள்.
2-ம் தளத்தில் அறுவை அரங்கு 2 எண்கள், நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்தும் அறை, பணி மருத்துவர் அறை பணி செவிலியர் அறை, கழிவறை மற்றும் சாய்தள வசதிகளுடனும். 3-ம் தளத்தில் பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு (எலும்பு பிரிவு) ஆண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டு மருத்துவ சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறைகள்.
4-ம் தளத்தில் ஆண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, எலும்பு பிரிவு பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர்அறை, பணி செவிலியர் அறை சாய்தளம் கழிவறை வசதிகளுடனும், 5-ம் தளத்தில் குழந்தைகளுக்கான பிரிவு, காப்பீடு திட்ட பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, சாய்தளம் கழிவறை வசதிகளுடனும்
6-ம் தளத்தில் கண் சிகிச்சை பிரிவு (ஆண்கள் மற்றும் பெண்கள்),ரத்த வங்கி, கூட்ட அரங்கம், சாய்தளம் கழிவறை வசதிகளுடனும் கட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு கூறினார்.
பணிகளை விரைந்து முடிக்க
தாராபுரம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு. பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர்.மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவரும்,தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன், தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் செந்தில்குமார், இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) கனகராணி, செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) தியாகராஜன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.