துறையூரில் வட்டார கல்வி அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு


துறையூரில் வட்டார கல்வி அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
x

துறையூரில் வட்டார கல்வி அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

திருச்சி

துறையூர் வட்டார கல்வி அலுவலகம் மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது. நேற்று இங்கு அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி திடீரென வருகை தந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த வட்டார கல்வி அலுவலர் மார்ட்டின் அமைச்சரை வரவேற்று அலுவலக பணியாளர்களை அறிமுகப்படுத்தினார். பின்னர் அமைச்சர் இலவச நல திட்டங்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பதிவேடு, அலுவலக பார்வை பதிவேடு அலுவலக குறிப்பு பதிவேடு உள்பட பல்வேறு பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது, துறையூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு தனியாக அலுவலகம் இல்லாததால் வருடத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு பள்ளி கட்டிடத்திற்கும் மாற்றப்படுகிறது. எனவே நிரந்த கட்டிடம் கட்ட வலியுறுத்தினர். அதற்கு அவர் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் உள்பட கல்வித்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.


Next Story