தமிழகத்தில் முதன்முதலாக லால்குடியில் மெய்நிகர் நூலகம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்
தமிழகத்தில் முதன்முதலாக லால்குடியில் மெய்நிகர் நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்த வைத்தார்.
தமிழகத்தில் முதன்முதலாக லால்குடியில் மெய்நிகர் நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்த வைத்தார்.
மெய்நிகர் நூலகம்
தமிழகத்தில் முதன் முதலாக லால்குடியில் மெய்நிகர் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா லால்குடி தொகுதி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன், மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் 76 நூலகங்களுக்கு ஒரு நூலகத்திற்கு 2 மெய்நிகர் கருவிகள் விதம் 152 மெய்நிகர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இக்கருவிகள் இடம்பெறும் நூலகங்களில் 155 நூலகர்களுக்கு இக்கருவியினை பயன்படுத்துவது தொடர்பான விரிவான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முதலாக லால்குடியில் மெய்நிகர் நூலகத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். திருச்சி மாவட்டத்தில் துறையூர், முசிறி ஆகிய தொகுதிகளில் உள்ள நூலகங்களுக்கும் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அன்பில் ஜீவி, பொது நூலக இயக்குனர் இல்லம் பகவத், பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், நூலக அலுவலர் சிவக்குமார், லால்குடி தாசில்தார் சிசிலினா சுகந்தி, லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகர், நூலக அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடல்
இதைத்தொர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் அருகே உள்ள பாரத மிகுமின் தொழிற்சாலையில் உள்ள பற்றவைப்பு மையத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பில் தொழில்கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். மேலும் அவர் மாணவ-மாணவிகளுடன் பேசும்போது, ஒரு மனிதனுக்கு அவன் கற்கும் கல்வியே அவனது தலைமுறையை காக்கும் என்றும், மேலும் தொழில் கல்வி என்பது ஒருவரை நாடி நாம் செல்ல தேவையில்லை என்றும், நமக்கு நாமே முதலாளி என்றும், ஆகையால் இந்த தொழில் கல்வியில் கவனம் செலுத்தி ஒவ்வொரு மாணவர்களும் முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
பின்னர் துவாக்குடி நகராட்சி ராவத்தான் மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளிடம் சீரமைக்க அறிவுறுத்தினார். ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாவட்ட கல்வி அதிகாரி பாலமுரளி, துவாக்குடி நகர் மன்ற தலைவர் காயம்பு, ஒன்றிய செயலாளர் கருணாநிதி, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மணப்பாறை
இதேபோல் மணப்பாறை அடுத்த வீ. பெரியப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அதிகாரிப்பட்டியில் ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.