முள்ளக்காடு வடபத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம்
முள்ளக்காடு வடபத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி முள்ளக்காடு வடபத்திரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், பல்வேறு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. விழாவின் சிகர நாளான நேற்று காலையில் 4-ம் கால யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகள் நடந்தது.
பின்னர் கோவில் விமானத்துக்கும், வடபத்திரகாளி அம்மனுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கோவில் திருப்பணிக்குழு தலைவர் சொக்கலிங்கம், கோவில் தர்மகர்த்தா சேகர் என்ற சந்திரசேகர், வக்கீல் செல்வகுமார், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர் உள்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story