தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித்தரும் - அமைச்சர்


தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித்தரும் - அமைச்சர்
x

முதல்-அமைச்சரின் சிங்கப்பூர்- ஜப்பான் பயணம் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

தஞ்சாவூர்

முதல்-அமைச்சரின் சிங்கப்பூர்- ஜப்பான் பயணம் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

பொது உறுப்பினர்கள் கூட்டம்

பட்டுக்கோட்டை வளவன்புரத்தில் உள்ள மண்டபத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் சுபசேகர் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ. வரவேற்றார். எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. ஏனாதி பாலசுப்பிரமணியன், அசோக்குமார் எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, மாநில தொண்டரணி துணை செயலாளர் சுபசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் காரணம். புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதல்-அமைச்சர் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித்தரும்.

தமிழக அரசின் 2 ஆண்டுகால சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணியில் தி.மு.க.வினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற லட்சியத்துடன் தி.மு.க.வை வெற்றிபெற செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

நூற்றாண்டு விழா

கூட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருகிற ஜூன் 3-ந்தேதி தொடங்கி 2024 ஜூன் 3-ந் தேதி வரை பொதுக்கூட்டங்கள் கருத்தரங்குகள் நடத்தி நலத்திட்ட உதவி, தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி ஆகியவற்றை வழங்குவது. தஞ்சை தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், கிளை மற்றும் வார்டுகளில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து தி.மு.க. கொடியேற்றுவது. ஜூன் 3-ந்தேதி சென்னையில் பல்வேறு இயக்க தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் திரளாக பங்கேற்பது. ஜூன் 20 அன்று திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் திரளாக பங்கேற்பது.

நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தை தடுத்து டெல்டா பகுதி காப்பாற்றிய முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் ரூஸ்வெல்ட் நன்றி கூறினார்.


Next Story