பிறந்த நாளையொட்டிஜீவா சிலைக்கு அமைச்சர்- கலெக்டர் மாலை அணிவிப்பு


பிறந்த நாளையொட்டிஜீவா சிலைக்கு அமைச்சர்- கலெக்டர் மாலை அணிவிப்பு
x

பொதுவுடமை வீரர் ஜீவாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் மனோதங்கராஜ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

பொதுவுடமை வீரர் ஜீவாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் மனோதங்கராஜ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அமைச்சர்- கலெக்டர் பங்கேற்பு

பொதுவுடமை வீரர் ஜீவாவின் பிறந்தநாளையொட்டி குமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள ஜீவா நினைவு மண்டபத்தில் அவருடைய உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜாண் ஜெகத் பிரைட், மாநகராட்சி மண்டல தலைவர் ஜவகர், மீனவரணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பசலியான், தி.மு.க. நிர்வாகி தில்லைச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு- அ.தி.மு.க.

இதுபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் மணிமண்டபத்தில் உள்ள ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டக்குழு உறுப்பினர் கங்கா, நகர செயலாளர் இசக்கிமுத்து, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் அருகில் உள்ள ஜீவா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், மாநில அமைப்புச் செயலாளருமான கே.டி.பச்சைமால் தலைமையில் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டரங்கம் அருகில் உள்ள ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர் பொன்.சுந்தர்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பூதப்பாண்டியில் உள்ள ஜீவா சிலைக்கும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் போலிங்பூத் காங்கிரஸ் மாநில தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் மணிமண்டபத்தில் உள்ள ஜீவா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும், அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story